உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பாதையில் காரை விரட்டிய யானை

மலை பாதையில் காரை விரட்டிய யானை

குன்னுார்; குன்னுார்- பர்லியார் அருகே மலைப்பாதையில் காரை விரட்டிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில், 8 யானைகள் உலா வருகின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பர்லியார் பண்ணைக்குள் புகுந்த யானைகள் நாற்றுக்களை சேதம் செய்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பர்லியார் அருகே சாலையில் நின்ற காட்டு யானை, அங்கே நிறுத்திய காரை விரட்டியது. அதன் பின் வனப்பகுதிக்குள் சென்றது.வனத்துறையினர் கூறுகையில், 'சாலையில் அவ்வப்போது யானைகள் உலா வருவதால், வாகனங்களை ஓட்டி வருபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்.சாலையில் நின்றிருந்தால் அதன் அருகில் நின்று வீடியோ, போட்டோ எடுப்பதோ, அதனை கடந்து செல்லவோ முயற்சிக்க கூடாது,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ