உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊருக்குள் வந்த யானை; ஓட்டம் பிடித்த மக்கள்

ஊருக்குள் வந்த யானை; ஓட்டம் பிடித்த மக்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திமாநகர் கிராமத்திற்கு மத்தியில் உலா வந்த யானையால், மக்கள் ஓட்டம் பிடித்தனர். பந்தலுார் அருகே அத்திக்குன்னா தேயிலை தோட்டத்தை ஒட்டி அத்திமாநகர் அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இரவு, 10:00 மணிக்கு ஒற்றை ஆண் யானை உலா வந்தது. வேலை முடித்து திரும்பிய மக்கள், யானையை குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாலையில் பார்த்து ஓட்டம் பிடித்தனர். எனவே, இந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கிராமத்திற்கு வரும் யானையை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி