உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த யானைப்பொங்கல் விழாவில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் யானைகள் இங்கு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று.இங்கு ஆண்டு தோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இன்று வனத்துறை சார்பில் மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர்.விழாவை முன்னிட்டு வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். திரளாக சுற்றுலா பயணிகள் விழாவில் கலந்து கொண்டு யானைப்பொங்கலை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஜன 16, 2025 20:07

மனிதன் சாப்பிட்டது எல்லாம் வளர்ப்பு விலங்குகளுக்கு போட்டதன் விளைவு அவைகளுக்கும் சர்க்கரை வியாதியாம் ஆக இனிப்பு இல்லாத சர்க்கரை பொங்கல் படையல்...


ஆரூர் ரங்
ஜன 16, 2025 10:55

பொங்கல் சாப்பிடுவதால் அவை தமிழ் யானைகள் எனப் புரிகிறது. பாகங்கள் யானைகளுடன் உருது/ மலையாளத்தில் பேசுவதை விட்டு விட்டு தமிழில் மட்டுமே கட்டளைகளை இட வேண்டும் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் கட்டளைப் பயிற்சி அளிக்கலாம். மற்ற கட்டிடங்களை போல முகாமுக்கும் கலைஞர் யானை முகாம் என பெயர் மாற்ற வேண்டும்.


Ramesh Sargam
ஜன 15, 2025 20:11

யானைக்கு பொங்கல் ஓகே. இதை பார்த்துவிட்டு, ஒருசிலர், அதான் வீட்டில் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்க்கும் சிலர், அடுத்து அவைகளுக்கும் பொங்கல் வைத்து, படைத்து கொண்டாடினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை