மேலும் செய்திகள்
விளைச்சல் அதிகரிப்பு; செவ்வாழை விலை வீழ்ச்சி
22-Oct-2024
கூடலுார் : கூடலுாரில் பலா பழங்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து விற்பனை செய்ய, மகளிருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.கூடலுார், பந்தலுார் பகுதியில் வீட்டு தோட்டங்கள், விவசாய தோட்டங்களில், பலா மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரிதாக வருவாய் ஏதும் கிடைப்பதில்லை. மாறாக சீசன் காலங்களில் பலா பழங்களை தேடி வரும் காட்டு யானைகளால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, பலா காய்களை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் பலா காய்கள் மூலம் சிப்ஸ் தயாரித்து கூடலுார், பந்தலுார் பகுதியில் உள்ள கடைகளுக்கு பலர் விற்பனை செய்து வருகின்றனர். கடைகளில் கிலோ, 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பலா மரத்திலிருந்து கிடைக்கும் இளம் காய், முற்றிய காய், பலாப்பழங்கள், பலா கொட்டைகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து, அங்குள்ள மக்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இதேபோன்று, கூடலுார், பந்தலுார் விவசாயிகள், மகளிர் குழுவினருக்கு பலா காய்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்து விற்பனை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்,' என்றனர்.
22-Oct-2024