உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திருவிழாவிற்குள் ஆக்கிரமிப்பு அகற்றுவது அவசியம்

திருவிழாவிற்குள் ஆக்கிரமிப்பு அகற்றுவது அவசியம்

குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் ஏப்., மாதம் துவங்கும் நிலையில், தேர் செல்லும் வீதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.குறிப்பாக,'கழிப்பிட வசதிகள், நடைபாதை, சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, நகராட்சி கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர் குருமூர்த்தி பேசுகையில், ''குன்னுார் மவுண்ட் ரோடு, வி.பி., தெரு, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் மூட்டை, மூட்டைகளாக பொருட்களை வைத்துள்ளதுடன் வாகன போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாடவும் முடிவதில்லை. பாரபட்சமின்றி இரண்டு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தீர்வு காண வேண்டும்,''என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர் வாசிம்ராஜா (பொ) கூறுகையில், ''திருவிழா காலம் என்பதால் உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ