மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
4 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
5 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
5 hour(s) ago
குன்னுார்;குன்னுார் 'டால்பின் நோஸ்' காட்சிமுனையில் இருந்து குதித்து, 'சாப்ட்வேர்' இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார்.நீலகிரி மாவட்டம், 'குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனை உச்சியில் இருந்து சுற்றுலா பயணி குதித்து தற்கொலை செய்து கொண்டார்,' என, போலீசாருக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில், 'ட்ரோன்' உதவியுடன் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்ததில், 800 அடி பள்ளத்தில் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து, தீயணைப்பு துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், பழங்குடியினர் அங்கு சென்று, மூன்று மணிநேரம் போராடி, உடலை கைப்பற்றி தொட்டில் கட்டி, 2 கி.மீ. துாரம் சுமந்து வந்தனர். பிரேத பரிசோதனைக்காக குன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.போலீசார் கூறுகையில், 'ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள 'விஸ்டெக்ஸ்' நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் சித்தார்த் அசாம்,35. குன்னுார் வந்த இவர் ரயில்வே ஸ்டேஷன் அருகே லாட்ஜில் தங்கியிருந்தார். காலையில் தனியார் சுற்றுலா கார் வாடகைக்கு எடுத்து டால்பின்நோஸ் சுற்றுலா மையத்திற்கு சென்று, அங்குள்ள காட்சிமுனை தடுப்பு வேலியை தாண்டி பாறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சப்தம் இட்டபோதும் கண்டு கொள்ளாமல் பள்ளத்தில் குதித்தார். இவருக்கு திருமணமாகவில்லை. மாதம், 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் விசாரணைக்கு பின் தெரியவரும்,'என்றனர்.இந்த சம்பவத்தால், நேற்று காலை முதல் காட்சி முனைக்கு செல்ல, சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago