உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய அறிவியல் நாள் விழா: மாணவர்களின் கண்காட்சி

தேசிய அறிவியல் நாள் விழா: மாணவர்களின் கண்காட்சி

கோத்தகிரி:கோத்தகிரி கடசோலை அரசு பள்ளியில் தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும், பிப்., 28ம் தேதி அறிவியல் அறிஞர் ராமன் வெளியிட்ட, 'ராமன் விளைவு' சார்ந்து, தேசிய அறிவியல் நாளாக கொண்டாடுப் படுகிறது. அதன்படி, கோத்தகிரி கடசோலை அரசு பள்ளியில் அறிவியல் மனப்பான்மை வளர்த்து, மூட நம்பிக்கைகளை அகற்றும் நோக்கில், தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அறிவியல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தபட்டன. அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல் திட்டங்களை மாணவர்கள் நிகழ்த்தி காண்பித்தனர். இதில், 70 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.ஏற்பாடுகளை, கணித பட்டதாரி ஆசிரியை ரெனிதா பிரபாவதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ