உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்பு பகுதியில் விழுந்த கற்பூர மரம்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் விழுந்த கற்பூர மரம்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி

கோத்தகிரி ; கோத்தகிரியில் அபாய மரம் விழுந்து, குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே, 'சிவில் சப்ளை' கிடங்கு அமைந்துள்ளது. அருகில், குடியிருப்புகள் மற்றும் தேவாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில், வானுயர்ந்த மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மழையுடன் காற்று வீசும் பட்சத்தில், மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில், இரண்டு மரங்கள் விழுந்து, சிவில் சப்ளை கிடங்கு மேற்கூரை பலத்த சேதம் அடைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை இதே பகுதியில் பெரிய மரம் விழுந்தது. சாலை நடுவே விழுந்த மரத்தால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாலையில் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும், சாலையோரம் மற்றும் பொது இடங்களில், ஆபத்தான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சிவில் சப்ளை கிடங்கு பகுதியில் மரங்கள் அகற்றப்படவில்லை.அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் படி, குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், இங்குள்ள ஒன்பது மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். ஆனால், மரங்கள் வெட்டுவதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.மக்கள் கூறுகையில், 'இனிவரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறையினர் மரங்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ