உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

 சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்: கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை தேவர்சோலை சாலையில் மரம் விழுந்து, மின்கம்பிகள் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு வந்து, மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மின் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். காலை, 7:00 மணி போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !