| ADDED : பிப் 14, 2024 01:09 AM
குன்னுார்:குன்னுாரில் ஏற்பட்ட மின்கசிவால் 'ஷாக்' அடித்து விவசாயி பலியானார்.குன்னார் ஓட்டுபட்டறையை சேர்ந்தவர் குருமூர்த்தி,48. சிறு தோட்டம் வைத்து, பூண்டு உள்ளிட்ட விவசாயம் மேற்கொண்டு வந்ததுடன் கூலி வேலையும் செய்து வந்தார்.இந்திலையில், நேற்றுமுன்தினம் மாலையில், தகர ஷெட்டில் மோட்டார் இயக்கி தண்ணீர் பாய்ச்சியுள்ளார். அப்போது தகர ஷெட்டினுள் மின் கசிவு ஏற்பட்டு ஷாக் அடித்து பலியாகி உள்ளார்.நேற்று தடயவியல் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குன்னுார் டவுன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 'பழைய ஒயர்கள் பயன்படுத்தியதில் மின்கசிவு ஏற்பட்டு தகர ஷெட்டில் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஷாக் அடித்த அதிர்ச்சியில் உயிரிழந்தார்,' என, தெரிய வந்தது. குன்னுார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.