வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகளால் விவசாயிக்கு நஷ்டம்
கூடலுார்; கூடலுார் பகுதியில், காட்டு யானைகள் உணவு, குடிநீர் தேடி இரவு நேரங்களில் விவசாய தோட்டங் களில் உலா வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விவசாய பயிர் கள், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஓவேலி சந்தனமலை அருகே நேற்று முன்தினம், இரவு யானை கூட்டம் முகாமிட்டது. நேற்று அதிகாலை, 3:00 சந்தனமலை முருகன் கோவில் வளாகத்துக்கு சென்று, பூசாரியின் சமையல் அறையை சேதப்படுத்தியது. அங்கிருந்தவர்கள் சப்தமிட்டும், கோவில் மணியை அடித்தும், யானையை விரட்டினர். அதேபோன்று, கூடலுார் புளியம்பாறை பகுதி யில் நேற்று அதிகாலை, நுழைந்த காட்டு யானை, கோபாலகிருஷ்ணன் என்பவரின் வாழை தோட்டத்தில் நுழைந்து, 100க்கும் மேற் பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. வனவர் குமரன் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகள் நேந்திரன் வாழை மரங்களை சேதம் செய்து வருவ தால், ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்ய, வனத்துறை இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் ஊருக் குள் நுழையாமல் தடுக்க வேண்டும்,' என்றனர்.