மேலும் செய்திகள்
கொசிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
29-Sep-2025
கோத்தகிரி:'கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின், 50வது ஆண்டு பொன்விழா நிறைவு நாள், உறுப்பினர் சேர்க்கும் விழா மற்றும் சங்க தலைவரின் சதாபிஷேக விழா,' என, முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள், அரசியல் கட்சியின், விவசாயிகள் பலர் பங்கேற்று, தலைவர் தும்பூர் போஜன் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். தொடர்ந்து, 'எதிர்வரும் நாட்களில், பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம், மனித- விலங்கு மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது,' என, முடிவு எடுக்கப்பட்டது. சங்க நிர்வாகி சதீஷ் நன்றி கூறினார்.
29-Sep-2025