வசீகரிக்கும் பால்சம் மலர்கள்; சுற்றுலா பயணிகள் குதுாகலம்
குன்னுார்; குன்னுாரில் கடும் குளிர் நிலவிய போதும் சிம்ஸ்பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை; கடும் குளிர் இருந்த போதும், வசீகரிக்கும் காலநிலையால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பூங்காவில் பால்சம் மற்றும் சால்வியா மலர்கள் அனைவரையும் வசீகரித்து வருவதால் பயணிகள் இந்த பூக்களின் முன்பு நின்று போட்டோ மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். குளிர் காரணமாக, சுற்றுலா மையங்களில் உள்ள கடைகளில், ஸ்வெட்டர், தொப்பி உள்ளிட்ட வெம்மை ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.