உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணியில் வேகம்! ஆன்லைன் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க ஏற்பாடு

நீலகிரியில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணியில் வேகம்! ஆன்லைன் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க ஏற்பாடு

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், கட்டுமானம் மற்றும் தொடர்புடைய பணிகளில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பு நடத்தப் படுவதால், வலைதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண்பது ; ஆன்லைனில் பதிவு செய்வது ; டிஜிட்டல் தரவு தளம் பராமரிக்கவும் மாநிலம் தழுவிய கணக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த ஆக., மாதம் அரசு ஆணை வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பு வரும் ஆண்டு ஜன., 31-க்குள் முடித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில், 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்டுமானம், கடைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தேயிலை தோட்ட நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில், 16,477 தொழிலாளர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

'ஆன்லைனில்' பதிவேற்றம்

கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய, 'https://labour.tn.gov.in/ism' என்றவலைதளம் உருவாக்கப்பட்டு, அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையினரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீலகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது யூசுப் கூறுகையில்,''கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையை அடையாளம் காண கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கட்டுமானம் மற்றும் தொடர்புடைய பணிகளில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களை, பணிபுரியும் அந்தந்த நிறுவனங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளர்களாகவே https://tnuwwb.tn.gov.inஎன்ற வலைதளத்திலும், பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுகொள்ள வேண்டும். வலைதளத்தில் பதிவேற்றம் செய்த விபரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் தொழிலாளர் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் எஸ்.பி., மற்றும் அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர், 'நாவா' தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்ற கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள் ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்