உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகனை வெட்டிய தந்தை தலைமறைவு

மகனை வெட்டிய தந்தை தலைமறைவு

பந்தலூர்: பந்தலூர் அருகே கொளப்பள்ளி கரகம்பாடி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் கோபி.48. இவர் கழுத்து அறுபட்ட நிலையில், வீட்டிற்குள் இருப்பதாக சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோபி மற்றும் அவரது தந்தை சங்கரன் இருவரும் தனியாக வசித்து வருவதாகவும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தந்தை தனது கழுத்தில் வெட்டியதாகவும் கோபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு, கோபியை அனுப்பி வைத்தனர். மகனை வெட்டிய தந்தை சங்கரன் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை