தீபாவளி பண்டிகை; 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஊட்டி : ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஊட்டி மண்டலத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகை இம்மாதம், 31ம் தேதி நடக்கிறது. ஊட்டி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முரளி கூறுகையில், ''தீபாவளி பண்டிகை யை முன்னிட்டுஊட்டியில் இருந்து, 30 சிறப்பு பஸ்கள் கோவை, ஈரோடு,திருச்சி, மதுரை, சேலம், மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து ஊட்டி மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளுக்கு அதிகம் பயணிகள் வர வாய்ப்புள்ளதால்,15 பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வரும் நவ., 4 தேதி வரை இயக்கப்படும். இரவு நேரங்களில் வெளி மாவட்டம் செல்லும் பயணிகளின்கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சிறப்பு பஸ்கள் இன்று, 28ம் தேதி முதல் இயங்குகிறது.