மேலும் செய்திகள்
கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
30-Sep-2025
'பிரிஜ்'ஜில் மின்கசிவால் தீ விபத்து
09-Oct-2025
குன்னுார்:குன்னுார் உமரி காட்டேஜில், ஆள் இல்லாத வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர். குன்னுாரை சேர்ந்தவர் முகமது நசீர். உமரி காட்டேஜ் பகுதியில் இவரின் வீடு காலியாக இருந்துள்ளது. இந்நிலையில், அந்த வீட்டில் தீ எரிவதை கண்ட மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலை அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் ஒயரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வீட்டின் கூரை உட்பட பலகை பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
30-Sep-2025
09-Oct-2025