உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விறகு லாரி கவிழ்ந்து விபத்து

விறகு லாரி கவிழ்ந்து விபத்து

கூடலூர்: கூடலூர், நாடுகாணி முதல் தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. கேரளாவில் இருந்து நேற்று, அதிகாலை விறகு ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி வந்த, லாரி தமிழக - -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுனர்கள் கூறுகையில், 'தமிழக -- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரை, சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகிறோம். ஆனாலும், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. விபத்துக்களை தடுக்க சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை