உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் துறை ஊழியர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி

மின் துறை ஊழியர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி

கூடலுார்; கூடலுார் மின் துறை ஊழியர்களுக்கு, தீ தடுப்பு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.கூடலுார், துணை மின் நிலையத்தில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு செயற்பொறியாளர் (பொ) முத்துகுமார் தலைமை வகித்தார்.கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், 'மின்சாரம் மூலம் தீ ஏற்படுவதற்கான காரணங்கள்; அதிலிருந்து ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்; களப்பணியின் போது தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் ஊழியர்களை பாதுகாப்பாக மீட்பது; முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள்,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர்கள் ஹரிகிருஷ்ணன், மஜீத், கார்த்தி கேயன், தார்கேஷ், சந்தோஷ்குமார் மற்றும் மின்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை