உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதல் வகுப்பு மாணவர்களுக்கு கிரீடம் வைத்து வரவேற்பு

முதல் வகுப்பு மாணவர்களுக்கு கிரீடம் வைத்து வரவேற்பு

பந்தலுார்; பந்தலுார் அருகே பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, முதல் வகுப்பு மாணவர்களுக்கு கிரீடம் வைத்து, பரிசுகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் துவங்கிய நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வாசுகி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில், பெற்றோர் மாணவர்களை ஆர்வத்துடன் சேர்த்து வருவது பாராட்டுக்குரியது. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் சூழலில், இந்த பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில், 96 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த பள்ளியின் சிறந்த செயல்பாட்டினை பாராட்டி, மாநில அரசு காமராஜர் விருதும் வழங்கி உள்ளது. அனைத்து கல்வி உபகரணங்களும் அரசு பள்ளிகளில் வழங்கி வரும் நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதனையடுத்து காமராஜர் விருது, பெற்றோர் மற்றும் மாணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிதாக பள்ளியில் சேர்ந்த, 96 மாணவர்களுக்கும் கிரீடம் வைத்து, பூங்கொத்து மற்றும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஸ்ரீஜேஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மினி பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் மரியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ