மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
அன்னுார்:அன்னுார் நவபாரத் நேஷனல் பள்ளியில், பெற்றோருக்கு, மாணவ, மாணவியர், பாத பூஜை செய்தனர்.சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியுள்ளது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், பெற்றோரை போற்றும் குழந்தைகளை உருவாக்கவும், பாத பூஜை நிகழ்ச்சி நவபாரத் நேஷனல் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில், சிவாச்சாரியார்கள், வேள்வி பூஜை நடத்தினர். கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதையடுத்து 1,000க் கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோரின் பாதங்களை நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ தூவி பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அட்சதை தூவி ஆசி வழங்கினர், மாணவர்கள், பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. பொது தேர்வு மற்றும் கற்றலில் மேன்மை அடைய உத்திகள் தெரிவிக்கப்பட்டன.பள்ளி சேர்மன் ரகுராமன், பள்ளி செயலர் நந்தகுமார், அறங்காவலர் சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
18 hour(s) ago