உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை; மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை; மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில், மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் நிலவும் 'குளு, குளு' காலநிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதில், டிச., முதல் பிப்., வரை உள்ள காலங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் உள்ளது. குறிப்பாக, நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், பழங்குடியின கிராமங்களில் சென்று ஆதிவாசி மக்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை அறிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 'இங்கிலாந்து போன்ற காலநிலை நிலவும் நீலகிரி மலை பாதையில் ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ