மேலும் செய்திகள்
நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
02-Jun-2025
வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி
14-May-2025
கோத்தகிரி,; கோத்தகிரி அருகே, சிறுத்தை தாக்கியதில், நான்கு ஆடுகள் பலியானது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், ராப்ராய் எஸ்டேட் பகுதியில், விவசாயி அம்மாசை ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில், மேய்ச்சலில் இருந்த, நான்கு ஆடுகள், சிறுத்தை தாக்கியதில் பலியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு, இறந்த ஆடுகள் அதே இடத்தில் புதைக்கப்பட்டன. வனத்துறையினர், விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவருக்கு, நிவாரணம் வழங்கப்படுவதாக உறுதி அளித்தனர்.
02-Jun-2025
14-May-2025