உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்

காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி புளியப்பதியில் உள்ள தனியார் தோப்பில், காட்டு யானை உள்ளதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. ஷோலையூர் சரக அதிகாரி வினோத் தலைமையிலான, ஏழு பேர் கொண்ட வனத்துறையினர், அப்பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். தோப்பினுள் இருந்த யானை, வனத்துறையின் ஜீப்பை நோக்கி ஆக்ரோசமாக ஓடி வந்தது. இதைக் கண்டதும், வனத்துறையினர் ஜீப்பில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். யானை தந்தத்தால் ஜீப்பை தூக்கி போட்டதுடன் முன் பக்கத்தை மிதித்து சேதப்படுத்தி, கண்ணாடியை உடைத்தன. வாகனத்தின் அருகே நின்றிருந்த காட்டு யானையை நீண்ட நேரத்துக்கு பின் விலகி சென்றதும், வனத்தினுள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ