உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னூரில் எரியும் பாரஸ்ட் டேல்: அணைக்க முடியாமல் திணறல்

குன்னூரில் எரியும் பாரஸ்ட் டேல்: அணைக்க முடியாமல் திணறல்

குன்னுார் : குன்னுார் பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் பற்றி எரியும் வனத்தீயை இரண்டு நாட்களாக அணைக்க முடியாமல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி துவங்கியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவ பயிற்சி கல்லுாரி அருகே பாரஸ்ட்டேல் பகுதியில் வனத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள், இரவு முழுவதும் தீயை அணைத்தனர். எனினும் பல இடங்களிலும் தீ பரவி வருகிறது.அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தீயணைப்பு துறையின் வாகனங்கள் கொண்டு சென்று தண்ணீர் பாய்ச்சி அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், நேற்று காலையில் இருந்து, ஊட்டி, கட்டபெட்டு, குன்னுார் வனச்சரகங்களை சேர்ந்த, 40 பேர் உட்பட தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செடிகள் மற்றும் மண் கொட்டி தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.எனினும், கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் கடும் புகை மூட்டத்தில் அனைவரும் சிரமப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர்.மக்கள் கூறுகயைில்,' கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைத்தது போல, தற்போதும் ஹெலிகாப்டர் வரவழைத்து தீயை அணைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி