மேலும் செய்திகள்
நீர் மோா் பந்தல் திறப்பு
28-Apr-2025
கோத்தகிரி; கோத்தகிரியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது.மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் புடியங்குடி ரஜினி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து வட்டார செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அ.தி.மு.க., வை சேர்ந்த, 50 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக, கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு தலைமையில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், மாநில எம்.ஜி.ஆர்., துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட அவை தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Apr-2025