மேலும் செய்திகள்
ராணுவ கல்லுாரி தேர்வில் ஆள்மாறாட்டம்: மூவர் கைது
14 hour(s) ago
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடியவர் கைது
05-Sep-2026
கலை திருவிழா போட்டி மாணவர்கள் அசத்தல்
04-Sep-2026
சிறப்பு பராமரிப்பு பணி
04-Sep-2026
அன்னுார் : அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 142 பேருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகின்றன. அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.தலைமையாசிரியர் (பொறுப்பு) ரம்யா ராயன் பேசுகையில், ''நடப்பு கல்வியாண்டு வரை அரசு பள்ளிகளில் படித்து கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. வரும் கல்வியாண்டு முதல், கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் பிளஸ் 2 உடன் தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்ளாமல் கண்டிப்பாக கல்லுாரிகளில் சேர்ந்து உயர் கல்வி பயில வேண்டும். உயர்கல்வி பயில்வோருக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளிக்கின்றன,'' என்றார்.பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், 82 மாணவர்கள், 60 மாணவியர், என 142 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாராயணசாமி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் தாமோதரன், முதுகலை ஆசிரியர் கலைச்செல்வன் உட்பட பலர்பங்கேற்றனர்.
14 hour(s) ago
05-Sep-2026
04-Sep-2026
04-Sep-2026