உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

கோத்தகிரி, : கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி முதுநிலை ஆசிரியர் சரஸ்வதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், பள்ளியில் பயிலும், பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார்.மேலும், பள்ளிக்கு, தேவையான, 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தரை விரிப்பு வழங்கினார். இதில், பள்ளி பி.டி.ஏ., துணை தலைவர் மாஸ்தி, தும்மனட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி உட்பட, 11 கிராம பொது மக்கள் பங்கேற்றனர், ஆசிரியர் பீமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ