| ADDED : ஜன 08, 2024 11:00 PM
ஊட்டி;ஊட்டியில் மாறி வரும் காலநிலையால் விவசாய பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஊட்டி அருகே எம்.பாலாடா, கல்லகொரை, மணல் ஹாடா, நஞ்சநாடு, கப்பத்தொரை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.கடந்தாண்டில், நவ., மற்றும் டிச., மாதத்தில் பரவலாக மழை பெய்ததால் மலை காய்கறி விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.அதில், 'கடும் மேகமூட்டம், சாரல்மழை, உறைபனி, வெயில்,' என, அவ்வப்போது மாறிவரும் காலநிலையால் பயிர்கள் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'அடிக்கடி மாறும் காலநிலையால் அறுவடைக்கு தயாராகி வரும் மலை காய்கறிகள் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தடுக்கும் முறை குறித்து தோட்டக்கலை துறை விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''அந்தந்த வட்டத்தில் உள்ள உதவி இயக்குனர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தகவல் பெற தோட்டக்கலை துறை அதிகாரிகளை அணுகலாம்,'' என்றார்.