உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு

உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு

கூடலூர்: மசினகுடியில் உண்ணி செடிகளிலிருந்து பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் அகற்றப்படும் உண்ணி செடிகளை சேகரித்து, இயந்திரம் உதவியுடன் துகள்களாக மாற்றி உலர வைத்து, மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இயந்திரங்கள் மூலம் பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.. முதல் கட்டமாக 9 டன் பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரித்து, கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 லட்சம் ரூபாய், சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு மூலம் 8 லட்சம் ரூபாய் என, 18 லட்சம் ரூபாய் டிரையர் இயந்திரம் வாங்கவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 70 சதவீத மானியத்திலும் 30 சதவீத வனத்துறை நிதியிலிருந்து சிமெண்ட் தரை தளம் அமைக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை