உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காந்தாரி மிளகாய் ரூ.400க்கு விற்பனை

காந்தாரி மிளகாய் ரூ.400க்கு விற்பனை

ஊட்டி;ஊட்டி மார்க்கெட்டில், 'காந்தாரி' மிளகாய் கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுாரில் காந்தாரி மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய் பார்க்க சிறியதாக இருந்தாலும், காரத்தில் சிறப்பானது. பச்சை, நீலம், ஊதா நிறங்களில் காணப்படும் இந்த மிளகாய் பழுத்தால் சிகப்பு நிறத்திற்கு மாறி விடுகிறது.அதில், புரோட்டின், கொழுப்பு, இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துகள் அதிகளவில் உள்ளன. தவிர, ரத்தக்கொதிப்பு, வாதம், மூட்டுவலி, காசநோய், சளி, போன்றவற்றை கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ளது. மேலும், காந்தாரி மிளகாய், கேரள ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.கூடலுார், பந்தலுாரில் குறைந்தளவில் விளைவிக்கப்படும் ' காந்தாரி' மிளகாய் கேராவுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஊட்டி மார்க்கெட்டில் கிலோ கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த மிளகாய் கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி