காந்தி பொது சேவை மையம் ஆலோசனை கூட்டம்
பந்தலுார் : பந்தலுாரில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின், ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயலட்சுமி, தீபா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, 'ரிச் மவுண்ட் சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்; பந்தலுார் பஜார் சாலைகளை சீரமைக்க வேண்டும்; கூவமூலா பகுதியில் முழு நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்; பந்தலுார் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்; அரசு பஸ்களை குறித்த நேரத்தில் முறையாக இயக்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் அகமது கபீர், அபுதாகீர், ராம்பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.