மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, கோரஞ்சால் பகுதியில், தனியார் எஸ்டேட் கட்டுப்பாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில், நீரோடை மற்றும் மூங்கில் புதர்கள் அதிகளவில் உள்ளன. இதனால், யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வந்து செல்வதுடன், வாழ்விடமாகவும் உள்ளது.இதனை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மற்றும் ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன.சாலையோர வனப்பகுதியில் உள்ளூர் மக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக், பாக்கு கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவு கொட்டி வருகின்றனர்.இதனால், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை உட்கொள்ளும் வனவிலங்குகள், பாதிக்கப்பட்டு வருவதுடன், அருகேயுள்ள நீரோடையும் மாசடைந்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025