உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்

தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்

கூடலூர்: இரும்பு பாலம் தடுப்பணையில் தேங்கும் குப்பைகளால் நீர் மாசு படுகிறது. கூடலூர், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, கூடலூர் நகராட்சியில், 2வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக, அப்பகுதி ஆற்றின் கரையில் கிணறு அமைத்து, மோட்டார் வாயிலாக, தண்ணீர் வினியோகித்து வருகின்றனர். அங்குள்ள ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, அதிலிருந்து குழாயில் கிணற்றுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம், ஆற்றின் கரையில் இருந்த மரம், சாய்ந்து தடுப்பணையில் விழுந்தது. தடுப்பணையில் கழிவுகள் தேங்கியுள்ளன. மரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது சாய்ந்த மரத்தை ஒட்டி, குப்பைகள், காய்ந்த மூங்கில்கள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி தடுப்பணை மாசுப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே ஆய்வு மேற்கொண்டு, மரத்தை அகற்றி, தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை