உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

ஊட்டி; நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஊட்டி பிங்கர் போஸ்ட் சங்க அலுவலகத்தில் நடந்தது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குலசேகரன், மாநில துணைத் தலைவர் தாமஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 'ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் பிரச்னைக்கு தீர்வு கண்டதற்கு அரசுக்கு சங்கம் நன்றி தெரிவிக்கிறது. திருவிழா காலங்களில், திருமண மண்டபங்கள், உள் அரங்குகளில். தற்காலிக கடைகள் அமைத்து ஆண்டு முழுவதும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலை எந்த நிலையிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்றுக்கொள்ளாது. ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை மட்டுமல்லாமல், பல்வேறு மளிகை பொருட்களை வாங்குமாறு மக்களை நிர்பந்தப்படுத்துவதை வணிகர் சங்கம் கலெக்டர் பார்வைக்கு எடுத்து சென்றதை அடுத்து, கலெக்டர் உத்தரவுப்படி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. கூடலுாரில் மோசமான சாலைகளை உடனே சீர் செய்து தராவிட்டால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும். மஞ்சூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான முள்ளி, பரளிக்காடு, மூன்றாம் வழிப்பாதையை திறக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. சங்க செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை