உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் நாய் கண்காட்சி ஜெர்மன் ஷெப்பர்ட் அசத்தல்

குன்னுாரில் நாய் கண்காட்சி ஜெர்மன் ஷெப்பர்ட் அசத்தல்

குன்னுார் : குன்னுாரில் நேற்று துவங்கிய நாய்கள் கண்காட்சியில், 138 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் போட்டிகளில் பங்கேற்றன.நீலகிரி மாவட்டம், குன்னுார் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில், நீலகிரி கென்னல் கிளப் சார்பில், நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. நீலகிரி ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் கூட்டமைப்பின், 8வது நாய்கள் கண்காட்சியில், நீலகிரி மட்டுமின்றி தேசிய அளவில், 138 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் பங்கேற்றன. கட்டளைக்கு கீழ்ப்படிதல், மோப்ப திறன், ஓடும் திறன், வயது, எடை, உயரம் பரிசோதித்து, போட்டிகள் நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மெலனி குரோத் நடுவராக பங்கேற்றார். சிறந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இன்று, 15ம் தேதி நடக்கும் கண்காட்சியில், ராஜ பாளையம், காரவன்ஹவுண்ட், டாபர்மேன், பீகிள், மஸ்தீப் உட்பட பல்வேறு ரக நாய்கள் பங்கேற்க உள்ளன.ஏற்பாடுகளை நீலகிரி கென்னல் கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !