உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்வின் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி ஊட்டியில் உள்ள அவர் நினைவிடத்தில் புகழாரம்

குட்வின் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி ஊட்டியில் உள்ள அவர் நினைவிடத்தில் புகழாரம்

ஊட்டி;ஊட்டி அருகே ராமகிருஷ்ணா மடத்தில் ஆண்டு தோறும், ஜன, 13ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தேசிய இளைஞர் தினமான அன்று, ஊட்டி தாமஸ் பேராலயத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளர் குட்வின் நினைவிடத்தில், நன்றியின் வெளிப்பாடாக அமைதி பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த நிகழ்ச்சியில், குட்வின் நினைவிடத்தில் அமைதி பிரார்த்தனை நடந்தது. தாமஸ் பேராலய பாதிரியார் கிறிஸ்டோபர் பங்கேற்று பேசுகையில்,''மனித வரலாற்றில் சிறந்த கருத்துக்களை தந்து அமைதியான வாழ்க்கைக்கு சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இன்றும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான பணிகள் குட்வின் மேற்கொண்டது என்றும் நிலைத்திருக்கும்,'' என்றார். ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிஜி சத்தியுக்தானந்தா பேசுகையில்,''இளைய தலைமுறை ஒழுக்கமான வாழ்க்கை சத்திய உணர்வுடன் வீரம் நிறைந்த மனதுடன் வாழ்க்கை எதிர் கொள்ள விவேகானந்தரின் கருத்துக்கள் பதிவு செய்த குட்வின் இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார்,'' என்றார். நிகழ்ச்சிக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள், ஆசிரியர்கள், விவேகானந்தர் பள்ளி மாணவர்கள், ராமகிருஷ்ண மட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ராமகிருஷ்ண மடத்தின் தன்னார்வலர் சிவதாஸ் மற்றும் 'மானஸ்' அமைப்பினர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை