உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்

 பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்

கோத்தகிரி: கோத்தகிரி குள்ளங்கரை பழங்குடியினர் கிராமத்திற்கு, முதல் முதலாக அரசு பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளதால், பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள குள்ளங்கரை கிராமத்தில், இருளர் பழங்குடியினர் மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கிராமத்தில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து வரும் பழங்குடியின மக் களுக்கு, இதுவரை அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால், தங்களது தேவைகளுக்காக, 3 கி.மீ., தூரம் நடந்து சென்று நகர பகுதிக்கு, வர வேண்டிய நிலை இருந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவோர், பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கப்பட்டு, முதல் முதலாக அரசு பஸ் இயக்கப்பட்டது. அரசு கொறடா ராமச்சந்திரன் அரசு பஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜூ, ஒன்றிய செயலாளர் பீமன் உட்பட, கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். முதல் முதலாக இயக்கப்பட்ட இந்த பஸ்சில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்பதால், பெண்கள் உட்பட, கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை