உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ் நேரம் மாற்றம்; மாணவர்கள் அப்செட்

அரசு பஸ் நேரம் மாற்றம்; மாணவர்கள் அப்செட்

குன்னுார்; பக்காசூரன் மலையில் இருந்து, குன்னுார் வரும் அரசு பஸ், காலை நேரத்தில் இயங்காததால், பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குன்னுார் ட்ரூக் பக்காசூரன் மலை பகுதிக்கு நாள்தோறும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கிராமத்தில், இரவில் தங்கி காலை, 6:35 மணிக்கு முதல் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, குன்னுாரில் இருந்து மீண்டும் பக்காசூரன் மலைக்கு சென்று, காலை, 8:00 மணிக்கு குன்னுாருக்கு புறப்படும். இந்த பஸ்சில், பயணம் செய்யும் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி கல்லுாரிக்கு வந்து சேர பயனாக இருந்தது.இந்நிலையில், கடந்த, 4 மாதங்களாக இந்த பஸ் காலை, 8:00 மணிக்கு இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.நீலகிரி மாவட்ட அழிவின் பிடியில் உள்ள பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் மணி கூறுகையில், ''பக்காசூரன் மலை பஸ், ட்ரூக் பகுதியில் இருந்து, தினமும் காலை, 8:00 மணிக்கு எடுக்க வேண்டிய நிலையில், காலை, 7:35 மணிக்கு புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால், செங்கல்புதூர் பழங்குடியின கிராமத்திலிருந்து, 1.5 கி.மீ., துாரம் நடந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீட்டில் காலை, 6:15 மணிக்கு புறப்படுகின்றனர். வனப்பகுதி வழியாக நடந்து வரும், மாணவ, மாணவியர் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கும் போது, பஸ்சிற்கு வர தாமதமாகிறது.கோரகுந்தா வழித்தடத்தில் இயக்கும் இந்த பஸ் பக்காசூரன் மலைக்கு மாற்றிவிட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுாரில் இருந்து காலை, 8:15 மணிக்கு கோரகுந்தாவிற்கு இந்த பஸ் செல்ல வேண்டும் என்பதால், வழியில் எங்கும் நிறுத்தாமல், அதிவேகத்தில் செல்கின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பள்ளி மாணவ மாணவிகளுடன் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை