மேலும் செய்திகள்
தாலுகா தலைநகரை கவனிக்குமா போக்குவரத்து துறை
19-Apr-2025
பந்தலுார்; மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துாய்மை பணி நடந்தது.அதன் ஒரு பகுதியாக, பந்தலுார் மற்றும் எல்லை சோதனை சாவடிகளான சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் தாசில்தார் சிராஜுநிஷா, நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் தலைமையில் பணி மேற்கொண்டனர். அதில், பிளாஸ்டிக், பாட்டில்கள், மட்கும் குப்பைகள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு நகராட்சி மற்றும் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணியில் டி.எஸ்.பி., ஜெயபாலன், வருவாய் ஆய்வாளர்கள் வாசுதேவன், கவுரி, வனச்சரகர்கள் அய்யனார், ரவி, வழங்கல் அலுவலர் பொன்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
19-Apr-2025