| ADDED : பிப் 22, 2024 06:27 AM
கோத்தகிரி: கோத்தகிரி அரவேனு தின்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின், 65வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சுதா தலைமை தாங்கினார்.கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர் பூமணி மற்றும் கிரீன் பீல்டு இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி ஆசிரியர் நடராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் அறிவுத்திறன் போட்டி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாதித்த மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவில், பி.பி.ஏ., நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார். பி.பி.ஏ. தலைவர் புனிதா நன்றி கூறினார்.