ஊட்டி மெயின் பஜாரில் குரு தேவரின் பிறந்தநாள் விழா
ஊட்டி; ஊட்டியில் சாந்தி குரு தேவரின், 135வது பிறந்தநாள் நிகழ்ச்சியை ஒட்டி பஜனை மற்றும் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மெயின் பஜாரில் குருதேவ் கோவிலின், 15வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, சாந்தி குரு தேவரின், 135வது பிறந்தநாள், வசந்த பஞ்சமி நிகழ்ச்சியாக நடந்தது. நிகழ்ச்சியை ஒட்டி மெயின் பஜாரில் இருந்து ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக முக்கிய வீதிகளில் குரு தேவரின் தேர் பவனி மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது. குரு தேவரின் பூஜையை புனித நாளை ஒட்டி 'கும அபிஷேக்' கொண்டாட்டமும் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான ஜெயின் மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.