உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எளிது, எளிது, தமிழ் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

எளிது, எளிது, தமிழ் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

அன்னுார்:பிளஸ் 2 தமிழ் பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. அன்னுார் வட்டாரத்தில் உள்ள அன்னுார், சொக்கம்பாளையம், ஆனையூர், கெம்ப நாயக்கன்பாளையம், காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் அன்னுார் மற்றும் கே.ஜி. பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

ரொம்ப ஈசி

ஹிரித்திக், அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னுார்.தமிழ் பாடத்தில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. எளிதாக 70 மதிப்பெண் பெற முடியும்.

80 மதிப்பெண் பெற முடியும்

கனிஷ்காமூக்கனுார்.மனப்பாடப்பகுதி, ஆறு மதிப்பெண் வினாக்கள், இரண்டு, ஒன்று என அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. தேர்வு எழுதியது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு வினாக்கள் மட்டும் பாடத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்தன. 80 மதிப்பெண் பெற முடியும்.

ஆறு மதிப்பெண் வினா கடினம்

அபுதாஹீர், அன்னுார்.ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. ஆனால் ஆறு மதிப்பெண் வினாக்கள் மூன்றுமே கடினமாக இருந்தது. ஆனாலும் எளிதில் தேர்ச்சி பெற முடியும். ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் படித்ததில் இருந்தே வந்திருந்தது

நேரம் சரியாக இருந்தது

மோனிஷ் பிரபு, எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை: தமிழ் கேள்வித்தாளில், ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு மதிப்பெண்கள் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு மதிப்பெண் கேள்விகள் பாடத்தின் உள்ளேயும், பாடத்தின் கடைசியில் உள்ள கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. ஆறு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுத நேரம் சரியாக இருந்தது.

இலக்கணம் கொஞ்சம் கஷ்டம்

மதுமிதா, அரசு மேல்நிலைப்பள்ளி காரமடை. தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. இலக்கண கேள்விகள் மட்டும் சிறிது கடினமாக இருந்தது. மற்ற கேள்விகள் ஏற்கனவே படித்து நன்கு எழுதிப் பார்த்ததால், எளிதாக பதில் எழுத முடிந்தது. ஆறு மதிப்பெண் கேள்விகள், பலமுறை தேர்வு எழுதியதால், விரைவாக பதில் எழுத முடிந்தது.

விரைவாக எழுத முடிந்தது

மோனிகா, அரசு மேல்நிலைப்பள்ளி காரமடை: தமிழ் தேர்வை போன்று அனைத்து தேர்வுகளும் எளிதாக இருக்க வேண்டும். அனைத்து கேள்விகளும், படித்து கேள்விகளாக இருந்ததால், விரைவாக பதில் எழுத முடிந்தது. ஆங்கில மொழிபெயர்ப்பு, ஏற்கனவே பயிற்சி பெற்ற கேள்வியாக இருந்ததால், அதுவும் எளிதாக எழுத முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்