மஞ்சூரில் ஹர்கர் திரங்க யாத்திரை நிகழ்ச்சி
மஞ்சூர்; மஞ்சூரில்,'ஹர்கர் திரங்க' வீடு தோறும் மூவர்ண கொடியேற்றுதல் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. மஞ்சூர் குந்தா மண்டல பா.ஜ., சார்பில்,'ஹர்கர் திரங்க' வீடு தோறும் மூவர்ண கொடியேற்றுதல் யாத்திரை நிகழ்ச்சிக்கு குந்தா மண்டல பா.ஜ., தலைவர் மீனா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தருமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். குந்தா மண்டல பா.ஜ., துணைத்தலைவர் பிரகாஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தராஜன், முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 'நம் ராணுவ வீரர்களை ஒவ்வொரு நொடியும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். நமக்காய் எல்லையில் பாதுகாக்கும் வீரர்களுக்கு நாம் நம்பிக்கையையும், அன்பையும் வழங்கவேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மஞ்சூர் பஜாரில் துவங்கிய பேரணி மணிக்கல் மட்டம், மேல்பஜார் வரை சென்றது. இதில், பா.ஜ., - அ.தி.மு.க., கட்சியினர் கையில் மூவர்ண கொடியேந்தி பங்கேற்றனர். பா.ஜ., மாநில நிர்வாகி சபிதா போஜன், அ.தி.மு.க., கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.