போதை பொருட்களின் தீமை; கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
கோத்தகிரி; கோத்தகிரியில் மது மற்றும் போதை பொருட்களில் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், போதை பொருட்களின் தீமைகள் குறித்து நடந்த கலை நிகழ்ச்சியில், தஞ்சை ஸ்ரீ ஹரி நாட்டுப்புற கலைஞர்கள் பிரசார கலைகுழு சார்பில், கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதில், மது அருந்துவதால் உடல் நலம் பாதிப்பு, குடும்ப சீரழிவு, தவிர்க்கும் முறை ஆகியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 'கள்ளச்சாராயம், கஞ்சா, புகையிலை பொருட்களை முழுமையாக தவிர்த்து, நீலகிரியை போதையில்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என, ஆடல் பாடல் மூலம் வலியுறுத்தப்பட்டது. மேலும், துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, அரவேனு,கோடநாடு, குஞ்சப்பனை மற்றும் டானிங்டன் உட்பட, பல்வேறு கிராம புறங்களிலும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.