மேலும் செய்திகள்
கேரளாவில் ஆக.6 வரை கனமழைக்கு வாய்ப்பு
03-Aug-2025
ஊட்டி; நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், இரண்டு நாட்கள் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது நிலையில், நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் குளிரான காலநிலை நிலவியதுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. மாவட்டத்தில், 280 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை அந்தந்த பகுதி வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். 'பாதுகாப்பு சூழல் இல்லாத இடங்களில் உள்ளவர்கள் அந்தந்த பகுதி வருவாய் துறையினரை அணுகி, நிவாரண முகாம்களில் தங்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
03-Aug-2025