மேலும் செய்திகள்
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
14-Oct-2024
குன்னுார் : நீலகிரிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள், மாலை நேரத்தில் குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை வழியாக சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்திற்கு ஆயுத பூஜை விடுமுறையை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்தன. நேற்று முன்தினம் மாலையில் இருந்து, வாகனங்கள் குன்னுார் மேட்டுப்பாளையம் சாலை வழியாக சென்றன. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.குறிப்பாக, மாலை, 6:00 மணியில் இருந்து கனமழை தீவிரமடைந்த நிலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் பயணிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.கொட்டும் மழையில் 'ஹைவே பேட்ரோல்' போலீசார், குரும்பாடி நெடுஞ்சாலை விரிவாக்க இடத்தில் இருபுறமும் வந்த வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.அவ்வப்போது மழை தீவிரமடைவதாலும், அடிக்கடி மேகமூட்டம் நிலவுவதாலும் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
14-Oct-2024