வாகனத்தில் அடிபட்டு இறந்த முள்ளம்பன்றி
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை யில் வாகனம் மோதி முள்ளம்பன்றி இறந்தது குறித்து வனத்துறையின் ஆய்வு செய்தனர். குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை யோர வனப்பகுதிகளில், யானைகள் மட்டுமின்றி, காட்டெருமை, கரடி, முள்ளம்பன்றி, மான், நீலகிரி லங்கூர் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், கே.எம்.எஸ்., அருகே முள்ளம் பன்றி ஒன்று அடிபட்ட நிலையில் முட்கள் சிதறி இறந்து கிடந்தது. ஆய்வு செய்த வனத்துறையினர் கூறுகையில்,'சாலையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.