உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மலை பாதையில் விடுமுறை சிறப்பு ரயில்

ஊட்டி மலை பாதையில் விடுமுறை சிறப்பு ரயில்

சேலம்:ஊட்டி மலைபாதையில், விடுமுறை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மலைத்தொடர், ரயில் பயணம், சுற்றுலா பயணியரிடையே பிரசித்தி பெற்றது. தற்போது விடுமுறை தினங்களால் பயணியரிடம் ஆர்வம் அதிகமாக உள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.உதகமண்டலம் - குன்னுார் விடுமுறைக்கால சிறப்பு ரயில், ஜன., 18, மாலை 4:45க்கு கிளம்பி, 5:55க்கு குன்னுார் சென்றடையும். குன்னுார் - உதகமண்டலம் விடுமுறை கால சிறப்பு ரயில், ஜன., 21, காலை 8:20 மணிக்கு கிளம்பி, 9:40 மணிக்கு உதகமண்டலம் சென்றடையும்.இந்த ரயில்களில், முதல் வகுப்பு, 80 சீட்கள், இரண்டாம் வகுப்பு, 140 சீட்கள் உள்ளன.உதகமண்டலம் - மேட்டுபாளையம் விடுமுறைகால சிறப்பு ரயில், ஜன., 21, காலை, 11:25க்கு உதகமண்டலத்திலிருந்து கிளம்பி, அன்று மாலை, 4:20க்கு மேட்டுபாளையம் சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை