மேலும் செய்திகள்
'மைட்ஸ்' நோயின் தாக்கம் அதிகரிப்பு
26-Apr-2025
ஊட்டி : 'தேயிலை தோட்டங்களில் படர்ந்துள்ள சிவப்பு சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்,' என, தோட்டக்கலை வலியுறுத்தி உள்ளது.நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் மற்றும் சிவப்பு சிலந்தி தாக்குதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்குகிறது. வறட்சி அதிகரிக்கும் போது தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்படுகிறது. குறிப்பாக, மார்ச் முதல் ஏப்., மாதம் வரை தேயிலை செடிகளை சிவப்பு சிலந்திகள் தாக்குகின்றன. ஆனால், மஞ்சூர், எடக்காடு, பாலகொலா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மே மூன்றாவது வாரத்தை கடந்தும் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் இன்னும் குறையவில்லை. சிலந்தி தாக்குதலால் தேயிலை செடிகள் நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி அறிக்கை: தோட்டத்தின் ஒரு பகுதியில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் தெரிந்து விட்டால் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அனைத்து செடிகளுக்கும் பரவி நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். சிவப்பு சிலந்தியை, 'புரோபர் கயிட்' என்ற மருந்தை செடிகளில்தெளிப்பதன் மூலம் சிவப்பு சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். அதேபோல், 'மைய்டன்' என்ற மருந்தை ஒரு மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
26-Apr-2025